பவ்வர் தொண்டு நிறுவனம் நடத்தும் பவ்வர் அய்யா வைகுண்டர் முதியோர் இல்லத்தில் 01.10.2019¸ செவ்வாய்க்கிழமை அன்று 29 -வது சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது.
முதியோர்கள் எதிர்நோக்கும் சவால்கள்¸ முதியோர் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சமூகத்திற்கு முதியோர்களின் பங்களிப்பு போன்றவற்றை உலகுக்கு வெளிக்காட்டும் விதமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினரால் அக்டோபர் 1-ம் தேதி முதியோரை கௌரவிக்கும் தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1991 -ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1-ம் தேதி “சர்வதேச முதியோர் தினமாகக்” கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி. R. சரோஜினி அவர்கள் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. செல்வி. C. கீதா¸ மேலாளர்¸ பவ்வர் அய்யா வைகுண்டர் முதியோர் இல்லம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார். அதன் தொடர்ச்சியாக விருந்தினர் அனைவரையும் திரு. N. இராமசந்திரன்¸ இயக்குனர்¸ பவ்வர் தொண்டு நிறுவனம் அவர்கள் மாங்கன்று கொடுத்து கௌரவித்தார்.
திருமதி. R. சரோஜினி¸ கன்னியாகுமரி மாவட்ட சமூகநல அலுவலர் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அதில் சர்வதேச முதியோர் தினவிழா கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்த சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும்¸ முதியோர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ சத்தான உணவுகளும்¸ உடற்பயிற்சிகளும்¸ போதுமான ஓய்வும் தேவையானவை என்பதைக் கூறினார். நிர்வாகத்தின் துரித ஏற்பாட்டை பாராட்டினார்.
திரு. N. இராமசந்திரன்¸ இயக்குனர்¸ பவ்வர் தொண்டு நிறுவனம் அவர்கள் நிர்வாகப் பணியாளர்களுக்கு நன்றி பாராட்டினார். மேலும்¸ மாவட்ட சமூகநலத் துறை மற்றும் அதிகாரிகளுக்கும் தன் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
திருமதி. J. ஜெய ஞான பிரின்சி¸ கண்காணிப்பாளர்¸ கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத் துறை அவர்கள் இயக்குனர் மற்றும் நிர்வாகத்தை¸ அவர்களுடைய துரிதமான செயல்பாட்டினைப் பாராட்டிவிட்டு முதியோர் இல்லம் நடத்துவதில் உள்ள சிக்கல்களையும் எடுத்துரைத்தார்.
டாக்டர். T. தனவதி¸ முன்னாள் முதல்வர்¸ விவேகானந்தா கல்வியியல் கல்லூரி அவர்கள் பல நன்னெறிக் கதைகள் மற்றும் பழமொழிகள் மூலமாக முதியோர்களின் நன்மதிப்பை நாம் அறியச் செய்தார்.
திரு. K.N. குமார்¸ ஆசிரியர் அவர்கள் நிர்வாகத்தின் மீதான தன்னுடைய கருத்துக்கள் மற்றும் முதியோர்களை கவனித்துக் கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிய கருத்துரையாற்றினார்.
திரு. அருள்¸ ஓவியர் அவர்கள் முதியோர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றி தான் அறிந்த நிகழ்வின் மூலம் எடுத்துரைத்தார்.
திருமதி. V. காந்திமதி¸ திட்ட ஒருங்கிணைப்பாளர்¸ பவ்வர் தொண்டு நிறுவனம் அவர்கள் இல்லத்தில் உள்ள முதியோர்கள் சார்பாக ஒரு கவிதை இயற்றி அதை வாசித்தார். அந்தக் கவிதை தாத்தா பாட்டிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.
திருமதி. சிவகாமி¸ ஊர்நல அலுவலர் மற்றும் திருமதி. R.K. திலகவதி¸ ஊர்நல அலுவலர்¸ அகஸ்தீஸ்வரம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இல்லத்தின் பயனாளிகளாகிய திரு. N. சுப்ரமணியன் மற்றும் திரு. M. நாகராஜன் ஆகிய இருவரும் தாங்கள் ரகசியமாக இயற்றிய கவிதையை அவையில் அனைவர் முன்னிலையில் வாசித்தனர். மேலும் சிலர் தங்கள் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக திரு. R.N. ஜயன் கேசவ் வென்னி¸ செயல் இயக்குனர்¸ பவ்வர் தொண்டு நிறுவனம் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கலைநிகழ்ச்சிகள் குழு நடனத்துடன் நிறைவுபெற்றது.
கலந்துகொண்ட அனைவருக்கும் சமூகநலத்துறை அலுவலர்¸ கண்காணிப்பாளர் மற்றும் நிர்வாகத்தின் நலன்விரும்பிகள் பரிசளித்து மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவுபெற்றது. கலந்துகொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. “தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்”9:00 am - 6:00 pm
You must be logged in to post a comment.