Pneumonia Vaccination Programme

About Event

தமிழக அரசின் மத்திய மாநில அரசு உதவிபெறும் தொண்டு நிறுவனங்களில் தங்கி பயனடையும் முதியோர்களுக்கு நிமோனியா தடுப்பு ஊசிஅளிக்க வேண்டும் என்ற திட்டத்தின் சார்பாக நிகழ்த்தப்பட்ட விழிப்புணர்வு முகாம் (29.11.2018) மற்றும் Screening (01.12.2018) நடவடிக்கைகளைத் தொடர்ந்து 14.12.2018 அன்று காலை பத்து மணியளவில் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தைச் சார்ந்த தேசிய குழந்தைகள் நல மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பாக (RBSK, Agasteeswaram Block) டாக்டர். மெர்சிலின் நிவேதிகா தலைமையிலான மருத்துவக் குழுவினர் வந்து ஏற்கனவே தயார் செய்யப்பட்ட தடுப்பு ஊசி அளிக்கப்பட வேண்டிய முதியோர்களின் பட்டியல் உதவியுடன் அனைத்து முதியோர்களுக்கும் நிமோனியாதடுப்பு ஊசி போடப்பட்டது. தடுப்பு ஊசி போடப்பட்ட பிறகு சுமார் இரண்டு மணி நேரம் தடுப்பு ஊசியின் விளைவினை கவனித்தனர்.

மருத்துவக் குழுவினரால் நிரப்பப்பட்ட நிமோனியா தடுப்பு ஊசி அளிக்கப்பட்ட முதியோர்களின் பட்டியல் மற்றும் புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்படுகிறது.

முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களுக்கு இலவசமாக நிமோனியா தடுப்பு ஊசி போட்டு முதியோர் வாழ்வில் அக்கறை காட்டிய தமிழக அரசுக்கும் இதற்கு நிதியுதவி அளித்த புரவலருக்கும் எங்கள் பவ்வர் அய்யா வைகுண்டர் முதியோர் இல்லத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிப்பதோடு இந்தப் பணியைத் தொடர்ந்து செய்திட அரசுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

10:00 am - 1:00 pm POVVER Ayya Vaikundar Home for Senior Citizens

Venue:
17/4D, Swaminathapuram,
Kanyakumari, - 629702,
Tamil Nadu,
India

by povverngo

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Powered By Indic IME