அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி “வாக்காளர் விழிப்புணர்வு முகாம்” பவ்வர் அய்யா வைகுண்டர் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு 11.03.2019 திங்கள்கிழமை அன்று மாலை 4 மணிக்கு நடத்தப்பட்டது. அனைத்து முதியோர்களும் கலந்துகொண்டனர். விழிப்புணர்வு முகாமுக்கான ஏற்பாடுகளை பவ்வர் தொண்டு நிறுவனம் செய்திருந்தது. மாவட்ட சமூகநலத்துறையிலிருந்து அதன் கண்காணிப்பாளர் திருமதி. பிரின்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அனைவரும் வாக்களிக்க வேண்டும், பவ்வர் சேவை நிறுவனம் இதற்கு உதவ வேண்டும், 100 % வாக்குகள் பதிவிடப்பட வேண்டும் என்பதனை மிகவும் ஆர்மாக மனதில் பதியும்படி எடுத்துரைத்தார். மேலும் EVM & VVPAT முறையில் வாக்களிப்பது எப்படி என்பதை விளக்கமாக தாத்தா பாட்டிகளுக்கு எடுத்துக்கூறினார். விழிப்புணர்வு முகாம் தொடர்பான சுவரொட்டிகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு, துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
4:00 pm - 5:00 pm POVVER Ayya Vaikundar Home for Senior Citizens